இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் தொடர் சோதனைகளில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முல்லைத்தீவின் அளம்பில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். தொலைதொடர்பு சாதனங்கள், கத்தி உள்ளிட்டவை அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post