ஜம்மு-காஷ்மீரில் 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தி, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
ரேபான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், 5 ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே, ரேபான் பகுதியில், மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post