இரண்டாவது டெஸ்ட் போட்டி- சரிவில் இருந்து மீண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அந்த அணியின் முதல் வரிசை ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 113 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது.பின்னர் ரோஸ்டன் சேஸ் -ஷேன் டௌரிச் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருந்த போதும் டௌரிச் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைத்தொடர்ந்து, சேஸ் உடன் கேப்டன் ஹோல்டர் இணைந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் விளையாடியது.
இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹோல்டர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சேஸ், 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணியில் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Exit mobile version