காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் 22 பேருக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வழங்கினார்.அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசுசெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்துகொண்டு 22 மாற்றுத் திறனாளிகள் பயனாளிகளுக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இருசக்கர வாகனத்தை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Discussion about this post