தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் : அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 1 கோடியே 2 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய பின்னர் தனியார் பள்ளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் பி.டி.அரசகுமார் தெரிவித்ததாவது: 

மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் சேர்க்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க படிப்படியாக பள்ளிகளை திறக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.மேலும் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை நிர்ணயிக்க கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை அரசு நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

 

Exit mobile version