தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் அனைத்துப் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.
தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளாட்சித் தேர்தல், வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றையொட்டி ஜனவரி 3ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. அதன்பின் நான்காம் தேதி பள்ளி திறக்கும் என அறிவிக்கப்பட்டது. நான்காம் தேதி சனிக்கிழமை என்பதால் அன்றும் விடுறை அறிவிக்கப்பட்டு ஜனவரி ஆறாம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரையாண்டுத் தேர்வுக்குப் பின் நீண்ட விடுமுறை கழிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மூன்றாம் பருவத்துக்குரிய பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post