போக்குவரத்து அமலாக்கம் மற்றும் ஒழுங்குபடுத்துதலில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரும் வகையில், மாநில அளவிலான பணபரிவர்த்தனையற்ற மின்னணு கட்டண ரசீது வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டத்தினை துவக்கி வைக்கும் விதமாக, 5 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் கட்டணம் பெறும் கையடக்க கருவிகளை முதலமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்வின் போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வெளிப்படையான போக்குவரத்து அமலாக்கத்தை ஏற்படுத்துவதுடன், விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் பணபரிவர்த்தனையற்ற அபராதத் தொகையை வசூலிப்பது, சாலை விபத்துகள், விதிமீறல்களை குறைக்கலாம். தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட வாகனங்களை கண்டுபிடிக்கவும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்.
Discussion about this post