சென்னையில் “பிரதமர் மோடியும் அம்பேத்கரும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அதிகமாக பேசும் நிலையில், அவர்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். பட்டியலின பெண்கள் தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் ரவி சுட்டிக்காட்டினார். பட்டியலின மக்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் 30 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியத் தொகை வேறு திட்டங்களுக்காக செலவழிக்கப்படுவதாகவும் சிஏஜி அறிக்கை கூறியிருப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
Discussion about this post