நாகேஸ்வர ராவை சி.பி.ஐ. இயக்குனராக அறிவித்ததை எதிர்த்து அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொயின் குரேஷி மீதான வழக்கை விசாரிப்பதில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. சிபிஐ இயக்குனராக அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானாவும் நீடிப்பார்கள் என சி.பி.ஐ. அறிவித்தது.
இந்நிலையில், இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது. இதனை எதிர்த்து அலோக் வர்மா, மற்றும் சிறப்பு இயக்குனர் ராஜேஷ் அஸ்தானா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்க உள்ளதாக தெரிகிறது.