அயோத்தி வழக்கின் தீர்ப்பைச் சீராய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அயோத்தியில் இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைச் சீராய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, நவம்பர் 9 ஆம் தேதி அளித்த தீர்ப்பே இறுதியானது எனக் கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
Discussion about this post