வழக்குகளில் சாட்சியம் அளிப்போருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலான, மத்திய அரசின் வரைவு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குற்றவியல் நீதி நடைமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி மலிமாத் குழு, ‘சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என 2003-ம் ஆண்டு பரிந்துரை செய்திருந்தது. அதன்பின், 2006-ம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய சட்ட ஆணைய அறிக்கையில், இது தொடர்பான வரைவு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாமியார் ஆசாராம் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், சாட்சியம் அளித்தவர்கள் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ‘சாட்சியம் அளிப்போருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு திட்டம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சில திருத்தங்களை கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Discussion about this post