தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பரக்கத் பானு என்பவருக்கும், திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த முஹம்மது யூசுஃப் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பரக்கத் பானுவை இரண்டாவதாக திருமணம் செய்த முகமது யூசுப், சீர்வரிசை கேட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பரக்கத் பானுவுக்கு தொலைபேசியில் முத்தலாக் கூறி விவாகரத்து கொடுத்து விட்டதாக கூறிய முகமது யூசுப் மூன்றாவதாக திருமணம் செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி தனது குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரக்கத் பானு புகார் அளித்துள்ளார்.
Discussion about this post