சவூதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விடுதி அறை எடுத்துக் கொள்ள சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது.
சவூதி அரேபிய அரசு தங்களது நாட்டின் கடுமையான கட்டுப்பாடுகளை நாளுக்கு நாள் தளர்த்தி வருகிறது. அதன்படி, தங்கள் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் உறவுக்கான சான்றை காட்டாமல் ஒரே விடுதி அறையில் ஒன்றாக தங்கலாம் என்று அறிவித்துள்ளது. வெளிநாட்டுப் பெண்கள் தங்களின் அடையாள அட்டை மூலம் தனியாக விடுதி அறை எடுத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சவூதியைச் சேர்ந்த பெண்களும் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து விடுதி அறை எடுத்துகொள்ள அனுமதி உண்டு என்றும் உடன் ஆண் யாராவது தங்கினால் அவர்களின் உறவுக்கான சான்றை சமர்பிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
Discussion about this post