காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டுள்ளார். இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழங்கம். அதன்படி இன்று அதிகாலை காலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவன் பெயர்ச்சியாகியுள்ளார். இதையடுத்து, சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது.
தொடர்ந்து ரத்தின அங்கி அலங்காரத்தில் காட்சியளித்த சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. தங்க காக வாகனத்தில் எழுதருளிய உற்சவர் சனி பகவானையும், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சனீஸ்வரனையும், திரளான பக்தர்கள் வணங்கி சென்றனர். நீதிமன்ற உத்தரவுபடி சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மட்டும் நடைபெற்று கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
Discussion about this post