மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சேர்மனாக சத்ய நாதெல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக மைக்ரோசாப்டின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அவர், தற்போது சேர்மனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மைக்ரோசாஃப்டின் சேர்மனாக ஜான் தாம்சன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
53வயதான நாதெல்லா கடந்த 2014 ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மைக்ரோசாப்டின் சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக மைக்ரோசாப்டின் தலைவராக இருந்த 72வயதான தாம்சன், கடந்த சில ஆண்டுகளாகவே தனது பணிச்சுமையை குறைக்கும் முடிவில் இருந்துள்ளார்.மைக்ரோசாப்டின் சிஇஓ வாக நாதெல்லா தேர்வு செய்யப்பட்ட நேரத்தில் தான் பில்கேட்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு பிறகு அந்த பதவி தாம்சனை சென்று சேர்ந்தது.
நாதெல்லா தலைமை செயல் அதிகாரியாக இருந்த காலத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய பரிமாணத்தை அடைந்தது. நிறுவனத்தை வீழ்த்தியிலிருந்து மீட்டெடுக்க க்ளவுட் கம்யூட்டிங், மொபைல் அப்ளிகேஷன்ஸ், ஆர்டிவிஷியல் இன்டலிஜன்ஸ் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதன்மூலம் நிறுவனத்தின் பங்குகள் 7 மடங்காக உயர்ந்தது. சந்தை மதிப்பு 2டிரில்லியன் டாலரை நெருங்கியது.
அதுமட்டுமல்லாமல் முக்கிய கம்பெனிகள் பட்டியலில் குறிப்பிட்ட தக்க இடத்தை மீண்டும் தக்க வைத்தது மைக்ரோசாப்ட்.
மைக்ரோசாப்டின் மூன்றாவது சிஇஓ மட்டுமல்லாமல், 3வது தலைவராகவும் இருந்து வருகிறார் நாதெல்லா.
Discussion about this post