புயல் காலங்களில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை பாதுகாக்க, 21 யூனிட் சேட்டிலைட் போன்களை தமிழக அரசு முதற்கட்டமாக கொள்முதல் செய்துள்ளது. ஒக்கி புயல் காலங்களில் ஆழ்கடலில் மீன் பிடித்த மீனவர்களை எச்சரிக்க முடியாததால் பல மீனவர்கள் புயலால் மாயமாகினர். இதனை கவனத்தில் கொண்டு தமிழக அரசு, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில், 181 சாட்டிலைட் போன்கள், 240 நேவிக் கருவிகள், 160 நேவ்டெக்ஸ் கருவிகள் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
முதற்கட்டமாக 20 லட்ச ரூபாய் செலவில், 21 யூனிட் சேட்டிலைட் போன்களை பி.எஸ்.என்.எல்.நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு வாங்கியுள்ளது. 15 முதல் 20 படகுகள் கொண்ட ஒரு குழுவிற்கு 2 சேட்டிலைட் போன்கள், 3 நேவிக் மற்றும் 2 நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேவிக் கருவிகளை இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்தும், நேவ்டெக்ஸ் கருவிகளை வெளிநாட்டில் இருந்தும் வாங்க உள்ளனர்.
Discussion about this post