வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசியதற்கு எஸ்ரா சற்குணம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவன மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விசிக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, வன்னிய சமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் எஸ்ரா சற்குணம் விமர்ச்சித்ததை அறிக்கையில் ஒன்றில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்தவ மத போதகராக இருக்கும் எஸ்ரா சற்குணம் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர் என்று விமர்சித்த ராமதாஸ்,திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்காக என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், ஆனால், உண்மை நிலை அறியாமல் பாமகவையோ, வன்னியர்களையோ இழிவுப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால் எஸ்ரா சற்குணம் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, வன்னிய சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசியதற்காக எஸ்ரா சற்குணம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ள ராமதாஸ், மன்னிப்பு கேட்காவிட்டால் எஸ்ரா சற்குணத்தை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
Discussion about this post