சாரதா நிதி நிறுவனம் மோசடி வழக்கில், நளினி சிதம்பரத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகையை, கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். இதற்காக அவர் 1 கோடி ரூபாய் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரித்து வரும் மத்திய அமலாக்கத் துறை, நளினி சிதம்பரம் மீதும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நளினி சிதம்பரத்திற்கு எதிராக, கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
Discussion about this post