சின்னத்திரை பிரபலமான சஞ்சீவ்- ஆலியா திருமணத்தைப் பற்றி சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ்- ஆலியா . ரீலில் ஜோடியாக நடித்து வந்தவர்கள் தற்போது ரியலிலும் ஜோடியாகியுள்ளனர்.
சஞ்சீவ்- ஆலியா இருவரும் அனைவரையும் கவரும் காதல் ஜோடி என்று சொன்னால் மிகையாகாது. பல நிகழ்ச்சியில் உங்களின் திருமணம் எப்போது என கேள்வி எழும்,அதற்கு தாங்கள் வேலையில் கவனத்தை செலுத்தி பல சாதனைகளை படைத்த பின்னரே திருமணம் செய்துக்கொள்ள போவதாக இருவரும் தெரிவித்திருந்தனர். இதனிடையே விஜய் டிவியின் ஒரு நிகழ்ச்சியில் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றது.அப்பொழுது மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
ஆனால் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா பிறந்தநாளன்று ரகசிய திருமணம் செய்துக் கொண்டதாகவும் , அனைவரின் ஆசிர்வாதம் இருவருக்கும் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த ரகசிய திருமணத்திற்கு காரணம் பல விதத்தில் நெருக்கடி இருந்ததாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் caption – ல் தெரிவித்துள்ளார்.
Discussion about this post