வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளோடு விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை ஒப்பிடப்படும் என்பதால் முடிவு அறிவிக்க காலதாமதம் ஏற்படும் என்று தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தூத்துக்குடியிலுள்ள வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துசெல்லப்பட்டன. அரசியல் கட்சி முகவர்கள், தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திப் நந்தூரி, வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்னனு வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்த பின் வி.வி.பேட் இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிடப்படும் என்று அவர் கூறினார்.
Discussion about this post