உலகின் மிக சிறிய 5 வது நாடான சான் மரினோ உருவான தினம் இன்று.
இத்தாலி நாட்டுக்குள் இருக்கும் மிகச்சிறிய நாடு சான் மரினோ. உலகின் மிக குட்டியான நாடுகளில் இதற்கு 5 வது இடம் கிடைத்துள்ளது.. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது வாடிகன் ஆகும். சான் மெரினோவின் பரப்பு வெறும் 61 சதுர கிலோ மீட்டர் தான்.
வெறும் 33 ஆயிரம் பேர் தான் இந்நாட்டு பிரஜைகள். இந்நாட்டில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கையைவிட அந்நாட்டில் உள்ள கார்களின் எண்ணிக்கை அதிகம்.. மிக வளர்ந்த நாடாக இருக்கும் இது கி.பி. 301 ம் ஆண்டு செப்டம்பர் 3 ந்தேதி, ரோமானிய பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
சான் மரினோ உலகிலேயே மிகவும் பழமையான குடியரசு நாடாக கருதப்படுகிறது.
Discussion about this post