கடந்த ஏப்ரல் மாதம் முதல் சாம்சங் நிறுவனம் ஏ சிரீஸ் வகையான ஸ்மார்ட்போன்களை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தியது. அதில் ஏ70 மாடல் மொபைல் வாடிக்கையாளர்களிடையே குறுகிய காலத்திலேயே சிறப்பான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் சாம்சங் நிறுவனம் 64 பிக்சல்கள் கொண்ட கேமரா சென்சாரை அறிமுகப்படுத்தியது. ஆனால் எத்தகைய மொபைலிலும் அதனை பொறுத்திப் பார்க்கவில்லை.
இந்த 64MP சென்சார் ” ISOCELL பிரைட் GW1 சென்சார் வகையாக இருக்கும் என கூறப்படுகிறது. இது சாம்சங் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பாகும்.
இதற்கிடையில் சாம்சங்கின் அடுத்த தயாரிப்பான கேலக்சி நோட் 10 இந்த ஆண்டில் அறிமுகமாகலாம் எனவும், அதில் இந்த 64 மெகாபிக்சல் கேமரா இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே அந்த நிறுவனத்தின் ஏ வரிசை மொபைலில் தான் கேமராவின் பிக்சல் அளவு 64 MPயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
64MP ISOCELL பிரைட் GW1 பிக்செல் டெட்ரசல் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்த ஒளியில் நான்கு 16MP பிக்சல்கள் கொண்டு 64MPயில் படங்கள் பதிவாகும் எனவும், இது ஏ70எஸ் என பெயருடன் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வாடிக்கையாளர்களாகிய நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.
Discussion about this post