சென்னை மணலியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டுக் கர்நாடகம், பீகார் மாநிலங்களில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்னை மணலியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் சோதனைக்கு வைக்கப்பட்டன. இதில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் சின்னங்கள் சரியான முறையில் பதிவாகிறதா எனச் சோதனை செய்தனர். இந்த மாதிரி வாக்குப்பதிவு தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
Discussion about this post