பத்திரிக்கையாளர் கொலை வழக்கில், அரியானாவைச் சேர்ந்த சாமியார் ராம் ரகீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அரியானாவைச் சேர்ந்த பிரபல சாமியார் ராம் ரகீம் சிங், கொலை, பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, பன்ச்குலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ராம் சந்தர் என்ற பத்திரிக்கையாளரை கொலை செய்த வழக்கில், ராம் ரகீமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே ராம் ரகீம் சிறையில் அடைக்கப்பட்ட போது ஏற்பட்ட வன்முறையில் 41 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இன்று தீர்ப்பு வெளியானதையொட்டி, அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
Discussion about this post