வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த சமாஜ்வாடி கட்சி முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்தியாவின் பெரிய மாநிலமான இங்கு 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக தொகுதிகளை வெல்லும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் இம்மாநில அரசியல் நகர்வுகள் இந்தியா முழுவதும் கவனிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ்வாடி கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளன. மேலும் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதாகவும் சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது.
Discussion about this post