சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான தனது சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தசாம் பிட்ரோடா வருத்தம் தெரிவித்துள்ளார்.
1984ல் சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை அரங்கேற்ற அப்போதைய பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடா, 1984ல் நடந்தது குறித்து பா.ஜ.கவுக்கு இப்போது என்ன கவலை என்றும் 1984ல் நடந்தது, அதற்கு தற்போது என்ன என்றும் அலட்சியமாக பதிலளித்தார். அவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸின் ஆணவத்தை இந்த பேச்சு வெளிகாட்டுவதாக பிரதமர் மோடி விமர்சித்தார், சாம் பிட்ரோடாவின் பேச்சை கண்டித்த ராகுல் காந்தி, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில், தனது பேச்சுக்கு சாம் பிட்ரோடா வருத்தம் தெரிவித்துள்ளார். நடந்தது நடந்துவிட்டது, தற்போது பேசுவதற்கு வேறு பிரச்சினைகள் உள்ளன என்று தான் கூறியதாக தெரிவித்துள்ள சாம் பிட்ரோடா, தனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.
Discussion about this post