பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோ மற்றும் குறும்புத்தனமான வீடியோக்கள், இணையத்தில் வைரலாகின்றன. அது பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
பாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சல்மான் கான். 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் most eligible bachelor என்ற அந்தஸ்த்துடனே வாழ்ந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான பாரத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் குறும்புத்தனமாக சண்டையிடும் வீடியோவையும் சல்மான் வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சிக் கூடத்தில் அதிக எடை தூக்கி பயிற்சி எடுப்பது, நீச்சல் குளத்தில் பல்டி அடிப்பது, குதிரையுடன் போட்டி போட்டு ஓடுவது, என உடற்பயிற்சி தொடர்பான பல வீடியோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார் சல்மான் கான்.
இதுமட்டுமல்லாமல், பொது இடங்களில் இளைஞர்களோடு குறும்புத்தனமாக சண்டையிடுவது, குழந்தைகளோட விளையாடுவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார்.
சல்மான் கான் என்ற பெயரை சொன்னாலே, அவருடைய ஆஜானுபாகுவான உடலமைப்புதான் பலருக்கும் நியாபகம் வரும். இளம் வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சல்மான் கான், இப்போதும் தன்னுடைய இளமையான தோற்றத்திற்கு, உடற்பயிற்சியையே காரணமாகச் சொல்கிறார். பாடிகார்ட், சுல்தான், தபாங் என பல திரைப்படங்களில் தன்னுடைய கட்டுமஸ்த்தான உடலமைப்போடு பல ஆக்-ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ள சல்மான் கான், தற்போது பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 திரைப்படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post