சேலம் ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி 5 கோடி ரூபாய் மதிப்பில் புதுபிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. நகரும் படிகட்டுகள், லிப்ட் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பயணிகள் அமர இருக்கை என ஏராளமான வசதிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஏற்கனவே இரண்டு நுழைவாயில்களாக இருந்ததை மாற்றி 3 நுழைவாயில்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தின் முன்புறம் இருந்த காலி இடங்களில் கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்வதற்கு வசதியும், அதன் ஒரு பகுதியில் பூங்காவும், மற்றொரு பகுதியில் பேருந்துகள் வந்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயில்கள் வந்து செல்லும் டிஜிட்டல் கால அட்டவணை வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து, திறப்பு விழா காண உள்ளது. இப்பணிகள் முடிவடைந்தால் சேலம் ரயில் நிலையம் புதிய பொலிவுடன் காணப்படும்.
Discussion about this post