சேலத்தில் முதலமைச்சர் திறந்துவைக்கவுள்ள புதிய பாலம் மூலம் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சேலத்தில், போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதற்காக கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதன் அடிப்படையில் இந்த பாலத்தின் ஒரு பகுதியான ராமகிருஷ்ணா சாலையில் இருந்து அழகாபுரம் வரை 1 கிலோமீட்டர் தெலைவு பாலமும், ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து ராமகிருஷ்ணா சாலை வரையில் சுமார் இரண்டரை கிலோமீட்டர் தொலைவு கொண்ட பாலம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
இந்த பாலத்தால் சாரதா கல்லூரி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும். மேலும் ஏற்காடு செல்பவர்கள், இருசக்க வாகனங்கள், கார்கள் சிறிதும் காலதாமதம் இல்லாமல் செல்ல முடியும். கல்லூரி மாணவர்கள், அலுவர் பணிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு செல்லமுடியும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த பாலம் திறக்கப்படுவதன் மூலம் சாரதா கல்லூரி சாலையில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுவதுடன், சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அஸ்தம்பட்டி வழியாக ஏற்காடு செல்லும் வாகனங்கள், மற்றும் நகருக்குள் செல்லும் வாகனங்கள் எளிதாக நகரை கடந்து செல்லமுடியும்.
Discussion about this post