கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதில், சேலம் மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அவருடன், சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் நிர்மல்சன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சேலம் மருத்துவமனையில் இதுவரை 263 பேர் குணமடைந்துள்ளதாகவும், சேலம் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறினார். சாதாரண இருமல், சளி, காய்ச்சல் இருந்தாலே மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றும், ஆரம்ப நிலையில் தொற்று கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்தலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Discussion about this post