சேலம் தொகுதியில், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான வசதிகள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என்ற பிரைலி எழுத்துகளால் ஆன வாசகத்தில் தங்களது கைரேகைகளை பதிவு செய்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான வசதிகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
Discussion about this post