இன்று பிக்பாஸ் வீட்டில் 75வது நாள்.இந்த வாரம் வீட்டின் விருந்தாளியாக சாக்ஷி,அபிராமி, மோகன் வைத்யா வந்துள்ளனர் .நேற்று போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து அந்த தலைப்பின் கீழ் விவாதிக்க வேண்டும்.நடுவர்களாக சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா இருந்து தீர்பு வழங்கினர்.விவாதத்தின் போதே சாக்ஷி, லாஸ்லியாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
.இன்றைய ப்ரோமோவில் விருந்தாளியாக வந்த மூவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு அவர்களின் குணத்திற்கு ஏற்ப விருது வழங்குகின்றனர்.அதில் முதலில் ’லாஸ்லியாவுக்கு பச்சோந்தியை போல் போலியானவர் லாஸ்லியா’ என மோகன வைத்யா கூற, சாக்ஷி விருதினை வழங்க,லாஸ்லியா அந்த விருதினை வாங்கி கீழே போட்டு விட்டு சென்றுவிடுகிறார்.
பின்பு சாக்ஷியோ ‘பின்ன நான் ஏன் award கொடுக்கனும்,ஒரு judge-க்கு மரியாதை இல்ல, இங்க என்ன நடந்துட்டு இருக்கு என கேட்க, லாஸ்லியாவோ என்னால வாங்க முடியாது என கூற, பின்பு இருவரும் மாறி மாறி shut up.. shut up.. என கத்திக் கொள்கின்றனர். வீட்டில் உள்ளவர்கள் என செய்வது என தெரியாமல் முழிகின்றனர்.இன்று பிக்பாஸ் வீட்டில் சாக்ஷியும், லாஸ்லியாயும் வேற லெவல் சண்டை போடுகின்றனர்.