எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி, பணியாளர்கள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எண்ணெய் நிறுவனங்கள் தாக்கல் செய்த பதில் மனுக்களில், பணியாளர்களுக்கு, கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. மேலும், கொரோனாவால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டால், மருத்துவ செலவுக்கு ஒரு லட்ச ரூபாய் காப்பீடும், ஒருவேளை மரணம் ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் கருணை தொகையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை முடித்து உத்தரவிட்ட நீதிபதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை அவ்வப்போதுஆய்வு மேற்கொள்ள வேண்டுமென எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினர்.
Discussion about this post