ஆடி மாத பூஜைகளுக்காக, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
கேரளா மட்டுல்லாமல் இந்தியா முழுவதிலும் இருந்து, ஏராளாமான பக்தர்கள் வருடம் முழுவதும் வந்து செல்லும் கோயில், கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில். இந்த கோயிலின் நடை ஆடி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுகிறார். அதை தொடர்ந்து, 18 படி வழி சென்று, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். இதற்கு பின், பக்தர்கள் படி வழி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு, 10 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை, 5 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்குப் பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு, நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார். பிரசித்தி பெற்ற இந்த நெய் அபிஷேகமானது வரும் 21 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். அனைத்து நாட்களிலும் மதியம் உச்ச பூஜைக்கு முன், களப அபிஷேகமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். இதை தொடர்ந்து வரும், 21ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
Discussion about this post