சபரிமலையில் போராட்டம் – 200 பேர் மீது வழக்கு

சபரிமலை விவகாரத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வரும் நிலையில், சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற இரண்டு பெண்களை, சன்னிதானத்திற்கு உள்ளே அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோயிலுக்குச் சென்ற கவிதா, ரஹானே என்ற இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பக்தர்களின் தொடர் போராட்டம் காரணமாக, தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நீடித்து வருகின்றது. இதனால், சபரிமலை, பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 22-ம் தேதிவரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு அமலில் இருக்கும் சன்னிதானம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version