மலையாள புத்தாண்டான விஷு பண்டிகையையெட்டி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று, மலையாளப் புத்தாண்டான விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் விஷூ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த வருட விஷூ பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டது. வரும் 19 ஆம் தேதிவரை பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அன்றிரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post