சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தொடர்ந்து 2 முறை அங்கு நடை திறக்கப்பட்ட நிலையில், பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் கேரள தேவசம் வாரியத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கேரள அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பு இதுபோன்று மனுத்தாக்கல் செய்ய கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சபரிமலை பகுதியில் ஏற்கனவே இருந்த பல கட்டிடங்கள் சேதம் அடைந்த நிலையில், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை உள்ளது. இதனால் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும், இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பிறகு பெண்களை அனுமதிக்கலாம் என தேவசம் வாரியம் தனது மனுவில் குறிப்பிட உள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post