அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேதலில் தலையிடக் கூடாது என ரஷியாவிற்கு தற்போதைய அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாகவும், டிரம்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, 2 ஆண்டுகள் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குழு 2016-ம் ஆண்டு தேர்தலின் போது, ரஷிய அதிகாரிகள் டிரம்பிற்கு உதவியதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என நாடாளுமன்றத்தில் கூறியது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்த ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிடக் கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தததாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post