இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி உள்ளன. ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை நேற்றுடன் 187 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரமாக நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியும் 77 புள்ளிகள் வரை உயர்ந்து, 10 ஆயிரத்து 225 புள்ளிகளில் முடிவடைந்தது.
இந்நிலையில் இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியதும், சென்செக்ஸ் 275 புள்ளிகள் சரிந்து 33 ஆயிரத்து 758 ஆக உள்ளது. தேசிய பங்கு சந்தை நிஃப்டியும் 79 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 145 ஆக உள்ளது.
அந்நிய செலாவணி பங்குச் சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து 73 ரூபாய் 31 காசுகளாக உள்ளது. பங்குச் சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post