கேரளாவில் கிளியின் தொண்டையில் சிக்கிய ரப்பரை அறுவை சிகிச்சை இன்றி கால்நடை மருத்துவர்கள் அகற்றினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அக்பர் அப்துல்லா என்பவர் வளர்த்து வந்த கிளி தவறுதலாக ரப்பரை விழுங்கியது. ரப்பர் தொண்டையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அதை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அறுவை சிகிச்சை செய்யாமல் ரப்பரை அகற்ற முடிவு செய்த மருத்துவர்கள், கிளிக்கு மயக்கமருந்து கொடுத்து ரப்பரை வெளியே எடுத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அக்பர் அப்துல்லா, மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Discussion about this post