இலையுதிர் காலம் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் இருந்து பால் வெட்டும் பணி படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் ரப்பர் மரத்தில் பால் வெட்டும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ரப்பர் மரங்களில் இருந்து இலைகள் உதிரத் தொடங்கி புதிய தளிர்கள் வளர ஆரம்பித்துள்ளன. இதனால், ரப்பர் மரங்களில் பால் வெட்டும் பணியினை விவசாயிகள் படிப்படியாக நிறுத்தி வருகின்றனர். இதனால் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் ரப்பர் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post