ரப்பர் இறக்குமதி கொள்கையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, குமரி மாவட்ட உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டம் கீரிப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமானோர் ரப்பர் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்களும் உள்ளனர். மத்திய அரசின் ரப்பர் இறக்குமதி கொள்கையால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், 240 ரூபாய்க்கு மேல் விற்பனையான ரப்பர், தற்போது 100 ரூபாய்க்கு விற்ப்னையாவதாகவும், ரப்பருக்கு நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post