தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாக இணையதளம் வாயிலாக செயல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த தகவல்களை மத்திய, மாநில அரசுகள் இணையதளம் மூலம் தகவல்களை பெறும் வசதியை செயல்படுத்தப்படவில்லை என்றும், இதனை முழுமையாக செயல்படுத்த உத்தரவிடக் கோரியும் பொதுநல அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தது. இதை விசாரித்த நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்குமாறு ஆகஸ்டு மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கான பதில் மனுக்களை முழுமையாக தாக்கல் செய்யாத நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து 4 வார காலம் கூடுதல் கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post