திண்டுக்கல் அருகே உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட 80 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நிலக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வேனில் வந்த குணசேகரன் என்பவர் பல லட்சம் ரூபாய் பணத்தை ஏடிஎம் மையங்களில் நிரப்ப கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனையிட்டதில் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் சந்தேகமடைந்த அதிகாரிகள், சுமார் 80 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Discussion about this post