நெல்லை அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 8 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
நெல்லை டவுன் பாறையடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் வந்த தனியார் பீடி ஆலைக்கு சொந்தமான காரை சோதனையிட்டதில் முறையான ஆவணங்கள் இன்றி பணம் எடுத்து வந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Discussion about this post