எல்லைப்பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைகளுக்கான பராமரிப்பு நிதியை, மத்திய அரசு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே மோதல் வெடித்ததால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்நிலையில் எல்லைப்பகுதியில் ராணுவ வாகனங்களின் சீரான போக்குவரத்துக்காக, அங்குள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லடாக் எல்லைப்பகுதியில் உள்ள சாலைகளை பராமரிக்க 72 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 589 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லடாக் பகுதியில் நடைபெறும் பணிக்கு மட்டும் 8 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எல்லைப்பகுதி சாலை அமைப்புக்கு வழங்கப்படும் தொகையானது 30 கோடி ரூபாயில் இருந்து 120 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Discussion about this post