அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தமிழ்நாடு கனிம வளத்துறை அறக்கட்டளை சார்பில் 40 லட்சம் ரூபாய் நிதியை கனிமவளத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் வழங்கி உள்ளார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம், பெருமுச்சு, குருவராஜப்பேட்டை, பாணாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழ்நாடு கனிமவள அறக்கட்டளை சார்பில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிறந்த குழந்தையின் இதயத்துடிப்பை கண்டறியும் கருவி, இசிஜி ரத்த அழுத்தம் பார்க்கும் கருவி, ரத்தம் பரிசோதிக்கும் கருவி மற்றும் ஆஸ்துமா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் கருவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய மக்களும் பயன்பெற வேண்டுமென ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏவுமான ரவி இதனை வழங்கினார்.
Discussion about this post