பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 117ஆக உயர்ந்துள்ளது.
முசாபர்பூரில் கடந்த சில நாட்களாக மூளைக்காய்ச்சல் பாதிப்பால் குழந்தைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. மூளைக் காய்ச்சல் ஏற்படுவதற்கு அங்கு விளைவிக்கப்படும் லிச்சி பழங்களே காரணம் என்று சந்தேதிக்கப்பட்டு அந்தப் பழங்கள் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கடுமையான காய்ச்சல், வாந்தி போன்றவற்றை அறிகுறியாக கொண்டுள்ள மூளைக் காய்ச்சல் தீவிரமடைந்தால், கோமா நிலைக்கும், மூளை செயலிழப்பு, இதயம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிரிழப்புக்கும் வழிவகுக்கும். இந்நிலையில் முசாபர்பூரில் மூளைக் காய்ச்சல் பாதிப்பிற்கு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 117ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 98 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 19 குழந்தைகள் உயிரிழந்தன.
Discussion about this post