வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட, 32 லட்ச ரூபாயைப் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் வாணியம்பாடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 32 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஏ.டி.எம்-இல் நிரப்புவதற்காக பணம் எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. எனினும் உரிய ஆவணங்களை எடுத்து வராததால் அந்தப் பணத்தை மாவட்ட கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
Discussion about this post