மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு மூவாயிரத்து 100 கோடி ரூபாயும், அம்மா உணவக திட்டத்துக்கு 100 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மின்துறைக்கு 20 ஆயிரத்து 115 கோடி ரூபாயும், சாலை பாதுகாப்பு திட்டத்துக்கு ஆயிரத்து 403 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறைக்கு எட்டாயிரத்து 876 கோடியும், சிறைத்துறைக்கு 392 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறைக்கு இரண்டாயிரத்து 716 கோடி ரூபாயும், வேளாண்துறைக்கு பதினோராயிரத்து 894 கோடி ரூபாய் நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல்துறைக்கு 31.93 கோடியும், கீழடி ஆய்வுக்கு 12 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்மார் சிட்டி திட்டத்துக்கு ஆயிரத்து 650 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
Discussion about this post